Saturday, November 5, 2016

காவிரியை தமிழ்நாட்டிலும் அழித்த கன்னடர்..!!

காவிரியை தமிழ்நாட்டிலும் அழித்த கன்னட(ஒக்கலிக‌)ர்..!!

கருநாடகத்தில் காவிரியை தடுத்து பெரும் அட்டூழியம் செய்வது கன்னடஒக்கலிகர் என்றால் சரி எனலாம். கருநாடகத்தில் பெரும்பாலான கன்னட அமைப்புகளின் தலைவர்கள் ஒக்கலிகா எனும் சாதியை சேர்ந்தவர்களே. இவர்களே தமிழர்களுக்கு எதிரான வன்முறையில் முன்னின்று பெரும் கொடுமைகளை இழைத்தவர்கள் ஆவர். தேவே கவுடா, எஸ் எம் கிருஷ்ணா போன்ற முதல்வர்கள் இந்த சாதியினரே. தென் கருநாடக பகுதியின் (மைசூர்,மண்டியா,சாம்ராஜ் நகர் பெங்களூர் உள்ளிட்ட மாவட்டங்களின்) பெரும்பான்மை சாதியினர் இவர்களே. ஆனால் தமிழ்நாட்டிலும் காவிரி அழிய காரணமாக‌ ஒரு கன்னடர் இருந்தார் என்றால் நீங்கள் ஆச்சரியம் மட்டுமல்ல அதிர்ச்சியும் அடைவீர்கள் அல்லவா? ஆம் மேலே தொடர்ந்து படியுங்கள்.

காவிரி ஆற்றுப் ப‌டுகைகளில் மணல் அள்ளுவது அரசு தான் என்றாலும் அதன் ஏற்றி இறக்கும் ஒப்பந்தத்தை ஆளும் கட்சிக்கு நெருக்கமானவர்களுக்கு தரப்படுவது வழக்கம் அப்படி கொடுப்பட்டவர்கலில் ஒருவர் தான் கோவையை சேர்ந்த ஆறுமுகசாமி எனும் கன்னடர்ஆவார். இவரும் ஒக்கலிக சாதியை சேர்ந்தவர்

 பொதுவாக தமிழ்நாட்டில் இருக்கும் வேற்று மொழியினர் பற்றிப் பேச்சு வந்தால் அவர்கள் பல நூறு ஆண்டுகளாக இங்கே இருக்கிறார்கள் தங்கள் மொழி சார்ந்த மாநிலங்களில் அவர்களுக்கு எந்த சொத்தோ தொடர்போ இல்லை அவர்களுக்கு தங்கள் மொழியை எழுதக் கூடத் தெரியாது என்றெல்லாம் கூறுவார்கள் இதில் ஒரளவு உண்மை இருந்தாலும் இந்த ஆறுமுகசாமி எனும் கன்னட வெறியர் காவிரி ஆற்றின் மணலை பெருமளவு கொள்ளை அடித்து காவிரி ஆறு அழியக் காரணமாக இருந்தவர். அவ்வாறு கொள்ளை அடித்த பணத்தை வைத்து தனது சாதியினருக்கு மட்டும் பல கல்வி சேவைகளை செய்தவர் (பின்பு பாவத்தின் அளவு அதிகரிக்க எல்லா சாதியினருக்கும் என்று விரிவு படுத்தினார்)




 சரி கல்வி சேவையையாவது விட்டுவிடாலாம் ஆனால் கன்னட இனவெறியனும் சாதி வெறியனும் ஆன முன்னாள் பிரதமர் தேவே கவுடா மற்றும் ஒக்கலிக சாதி மடமான ஆதி சுஞ்சனகிரி எனும் மடாதிபதி ஆகியோர்களை அழைத்து வந்து விழாக்கள் எடுப்பது போன்றவற்றை தனது இனப்பாசம் காரணமாக தொடர்ந்து செய்து வருகிறார்.


குறிப்பாக ஆதி சுஞ்சனகிரியின் கிளையை ராமேசுவரம் கோவிலில் ஆரம்பிக்க எல்லா வகையிலும் துணை நின்றவர் இந்த இனவெறியர் ஆவார்.

இந்த ஆதி சுஞ்சனகிரி மடத்திற்கு தேனி மாவட்டத்தில் கல்லூரிகள் உள்ளன என்பது கூடுதல் தகவல்.(தி.மு.க எம் எல் ஏ கம்பம் ராமகிருஷ்ணன் இக்கல்லூரிகளின் செயலாளர்)

பார்க்க படம் இணைப்பு




துவக்க விழாவில் கலந்துகொண்ட தேவே கவுடா எனும் சாதி வெறி இன வெறியனின் மகன் குமாரசாமி



தேனி மாவட்டத்தில் முல்லைப்பெரியாறு பாசனப்பரப்பில் எண்பது விழுக்காட்டை ஆக்கிரமைத்துள்ளவர்கள் இந்த கன்னட ஒக்கலிகரே என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

தன்னுடைய இனப்பாசம் காரணாமாக கருநாடக முதல்வர் சித்தராமையாவை சந்தித்த ஆருமுகசாமி



தமிழ்நாட்டிலும் இவ்வளவு பச்சையாக கன்னடர்கள் தங்களது இனவெறியை வெளிப்படுத்தி வருகிறார்கள் இவர்கள் மீது ஒரு துரும்பும் விழாமல் பாத்துக்கொள்கின்றன திராவிட அரசுகள்
 ஒரு கேள்வியைக் கூட தி.மு.க வோ அ.தி.மு.க வோ அல்லது ம.தி.மு. க கூட எழுப்பியதில்லை ஏன்? ஏன்??
ஆனால் திராவிட வெறிக்கும்பலுக்கு எப்பொழுதும் தமிழர்கள் தான் சாதி வெறியர்கள் இன வெறியர்கள்

தமிழர்களே சிந்திப்பீர்..!!

Saturday, October 29, 2016

கீ.வீரமணியின் தற்சாதி (சுய சாதி) பற்று அல்லது வெறி..!!

கீ.வீரமணியின் தற்சாதி (சுய சாதி) பற்று

தமிழர் தலைவர் என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொண்டு பகுத்தறிவுவாதியாகவும் சாதி ஒழிப்பாளராகவும் தாலி ஒழிப்பாளராகவும் காட்டிக்கொண்டு இருக்கும் வீரமணியை என்ற போலியின் யாதவ சாதிப்பற்று

சான்று கீழே..

இவர் தாக்கப்பட்ட போது இவரின் சாதியான யாதவ சாதி உணர்வை மைய இழையாக கொண்டு செயல்படும் யாதவ மகா சபை சமாஜ்வாடி (முலாயம் சிங் யாதவ்) ராஷ்ட்ரிய லோக் தல் (லல்லு பிரசாத் யாதவ் ) போன்றவை இவரை சந்தித்தது விடுதலையில் செய்தியாக வந்திருக்கிறது. சாதியில் நம்பிக்கை அற்ற ஒருவர் அதிலும் "தமிழர் தலைவர்" ஒருவர் தனது சாதி சங்க ஆட்களுடன் சந்தித்து தனக்கு தனது சாதியினரின் ஆதரவு இருப்பதாக காட்டிக்கொள்வது என்ன வகையான சாதி ஒழிப்பு என்பது பகுத்தறிவுக்கே வெளிச்சம்

Sunday, October 23, 2016

நம்புங்கள் அய்யா திராவிடம் சாதியை ஒழித்து விட்டது ???

நம்புங்கள் அய்யா திராவிடம் சாதியை ஒழித்து விட்டது ?

இவர்கள் சாதி "ஒளிப்பெல்லாம்" தமிழ் சாதிகளிடம் மட்டும்  போல..!!


Monday, August 3, 2015

திராவிடத்தால் வீழ்ந்தோம்.... முன்னுரையில் இருந்து மேலும்..

இன்னும் பத்துப் பதினைந்து ஆண்டுகளில் ஈ.வே இராமசாமிப் பெரியார் கட்டியமைத்த திராவிடர் கழகத்தின் தொடக்கக் கால உறுப்பினர் யாருமே இருக்க மாட்டார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தை நிறுவிய தலை மக்கள் யாருமே இருக்கப் போவதில்லை அவற்றின் வழி வந்த பிற கழகங்களோ பெயருக்குதாம் அவற்றின் கொள்கை வழி நிற்பன.

செத்த உடம்பை ஒரு பக்கத்தில் வைத்துக் கொண்டு சாகக் கிடக்கின்ற அதன் திராவிடக் கொள்கையை இந்நிலையில் ஆழமாக அலச வேண்டி உள்ளது வளர்ந்துவரும் தமிழ்த் தேசிய ஓர்மைக்கு நல்ல ஊட்டமும் தெளிவும் கிடைக்கும் என்பதைக்  கருதியே இந்த ஆய்வை நடத்த வேண்டி உள்ளது அத திராவிடக் கொள்கை தமிழக அரசியல் வாழ்வியலின் மீது முக்கால் நூற்றாண்டுகளாக அழுந்தக் குந்திக் கிடந்ததனால் தமிழுக்கும் தமிழரினத்திற்கும் நன்மைகளை விடத் தீமைகளே மிகுந்தன வென்பதைத் தமிழரில் இளந்தலைமுறையினருக்கு  மிகத் தெளிவாக உணர்த்தியே ஆக வேண்டும். இதனால் எட்டிக் கசப்பான சில உண்மைகளையும் உள்ளடக்க நேர்ந்தது.

குறுநூலாக வடிவெடுத்துள்ள இந்தக் கட்டுரை நல்ல தூசியைக் கிளப்பும்  என்பதை நூலாசிரியன் என்னும் வகையில் நன்கறிவேன். தமிழரினத்தின் நலன் கருதி ஒரு வரலாற்றுப் பணியைச் செய்யாமலிருக்க இயலவில்லை. உண்மை விளங்கியும் அதைப் புலப்படுத்தாமை கயமையாகுமன்றோ ? அதை மனத்தில் கொண்டே சில கருத்துக்களைக் கட்டுரையாக்கித் தமிழ் மக்களின் முன்னால்  படைத்திடத் துணிந்தேன் போற்றல்களாயினும்  தூற்றல்களாயினும்   அவற்றையெல்லாம் கட்டிச்  சுமக்கத் தானே வேண்டும் ?

 அவையாவும் காலம் என்மேல் ஏற்றிட்ட பொதியே எனக் கருதி விளைவைப் பற்றிக் கவலை கொள்ளாமல் ஏடெடுத்தென் எழுதுவதற்கு.

அறிவர் குணா.. நன்றியும் நெகிழ்வும்...  
  

Tuesday, July 28, 2015

திராவிடத்தால் வீழ்ந்தோம்

முன்னுரையிலிருந்து.............

ஆரியக் கோணத்திலிருந்து தமிழரின் வரலாற்றை பலர் எழுதியது உண்டு. திராவிடப் பார்வையைக் கொண்டு வரலாறு எழுதியவரும் உண்டு அவை யாவுமே தமிழரின் வரலாற்றை கொச்சைப் படுத்தவும், இருட்டடிப்புச் செய்யவுமே பார்த்தன வென்பது பட்டறிவு.

இதனால் அடுத்து வரும் பத்தாண்டுகளுக்குக் கடுமையாக உழைத்துத் தமிழரினப் பார்வையில் தமிழரின் வரலாற்றை எழுதுவதற்காகவென இனி யாதொரு கருத்தரங்கிலும் கலந்துகொள்வதில்லையென நான் முடிவெடுத்திருந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணியிடமிருந்து 1994 சூன் 25-26 ஆம் பக்கல்களில் குடந்தையில் நடத்தவிருந்த "திராவிட மாயை" என்னும் தலைப்பில் கருத்துரையாற்ற ஓர் அழைப்பு வந்தது. கொடுக்கப்பட்டிருந்த தலைப்பு, என்னுடைய முந்தைய முடிவில் ஓர் இளக்கத்தை ஏற்படுத்தியது. அந்த கருத்தரங்கிற்காக நானெழுதிய நீண்ட கட்டுரையே இஃதாகும். கருத்தரங்கை ஏற்பாடு செய்தவர்களுக்கும் எனக்கும் இடையிலான செய்திப் போக்குவரத்தில் ஏற்பட்ட சுணக்கத்தால் அதில் பங்கெடுக்க முடியாமல் போயிடினும் அக்கருத்தரங்கிற்கான அழைப்பே இக்கட்டுரையை எழுதத் தூண்டுகோலாகியது

--அறிவர் குணா 

Wednesday, June 17, 2015

தமிழ்த் தேசியம்

தமிழ் தேசியத்திற்கான களம். தமிழரின் வாழ்வு முன்னெப்போதும் இல்லாத வகையில் பல்வேறு நெருக்கடிகளுக்கு சிக்கியிருக்கும் நிலையில் தமிழரின் முன்னேற்றத்திற்காகவும் மீட்சிக்காகவும் எழுச்சிக்காகவும் வலைத்தளத்தில் தீவிர முன்னெடுப்புகளை நடத்துவதே இத்தளத்தின் நோக்கமாகும். நன்றி